இன்றைய நாடாளுமன்றத் தொடக்க விழாவில் பிகேஆர், டிஏபி எம்பிகள் கருப்பு உடையில் கலந்துகொண்டனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு உடை தரித்திருந்தனர்.
பாஸ் எம்பிகளில் சிலரும் கருப்பு உடை அணிந்திருந்தனர். ஆனால், அவர்களில் பலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கம் பற்றி அறிந்திருக்கவில்லை.
கருப்பு உடை தரிப்பதென்பது கட்சியின் முடிவல்ல அல்லவென்றும் எம்பிகள் தாங்களே செய்த முடிவு என்றும் பிகேஆர் எம்பிகள் தெரிவித்தனர்.
அன்வார் உள்ளே இருப்பதால், அனைவரும் மூக்கை சிந்தி அரசியல் நடத்துகிறார்கள். நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் லாக்கப்பினுள்ளே கொலை செய்யப்படுகிறார்கள். ஓரிருவரை தவிர்த்து மற்ற எந்த மக்கள் கூட்டணி பயல்களும் வாயைத் திறப்பதில்லை.
அல்தாந்துயாவும் தான் [mati katak] உலகம் என்ன செய்தது ?
நம் அரசியல் தலைவர்கள் இதுவரை தமிழர்களுக்காக எதையும் செய்ததாக தெரியவில்லை,துன் வி.தி.ச. அவர்களைத் தவிர்த்து.இன்றைய தலைவர்கள் தன் குடும்பம், சொந்த பந்தம் வாழ வழி வகுத்துக் கொள்கிறார்கள்.மக்களாவது மண்ணாங்கட்டியாவது.நம் இன அரசியல்வாதிகளே நமக்கு “வழி” காட்டியது இல்லை. மற்ற இன அரசியல்வாதிகளா நம்மை கவனிப்பார்கள். உதாரணமாக நம் நம்பிக்கை பிரதமர் ஒருவரே போதுமே. இண்ட்ராப்புடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் என்ன ஆனது?
ஒரே வழி இந்த umno அரசாங்கத்தை மாற்ற வேண்டும்