துணைப் பிரதமர் முகைதின் யாசினும் செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷியும் பதவி விலக வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) நொடித்துப் போகாமல் காப்பாற்றப்படும் என்று அறிவித்ததை அடுத்து முகைதின் சொன்னது பொய்யாகிப் போனது என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என ரபிஸி கூறினார்.
சைட் அலியைப் பொறுத்தவரை அம்னோவில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவராய் இருக்கிறார் என்றவர் சுட்டிக்காட்டினார்.
“கட்சியில் நடப்பதறியாதிருக்கிறார். எனவே, கட்சியைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்டு அவர் எதையும் பேசக்கூடாது”, என்று பாண்டான் எம்பி-ஆன ரபிஸி குறிப்பிட்டார்.
முகைதின், கடந்த வாரம், அரசாங்கம் கடனில் சிக்கியுள்ள அந்நிறுவனத்தை மீட்டெடுக்கக் கூடாது என்று கூறி இருந்தார். அனால், இரண்டாவது நிதி அமைச்சர் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, 1எம்டிபி-க்குக் கடனளிப்பதற்கு ரிம950 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


























துணைபிரதமரின் அடுத்த விளக்க அறிக்கைக்கு காத்திருப்போம்.. அம்னோ அமைச்சராச்சே, நிச்சயம் திசை திரிக்கும் விளக்கத்தினை கைவசம் கொண்டிருப்பார்.
திண்ணை எப்பகாலியாகும் Pm நாற்காலியில் உக்கார காத்திருக்கும் முகைடினை பதவி விலகச்சொல்வது நாயமா ரிபிசி?