1எம்டிபி: அரசாங்கம் கொடுக்கும் ரிம950 மில்லியன் ஒரு வணிகக் கடனாகும்

arulநிதி அமைச்சு  அதன் முதலீட்டு  நிறுவனமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு  ஏற்பாடு  செய்துள்ள  ரிம950 மில்லியன் கடன் வசதி  ஒரு  வணிகக்  கடனாகும்  என  1எம்டிபி  தலைவர்  அருள்கண்ட  கந்தசாமி  கூறினார்.

இரண்டாவது  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா, 1எம்டிபி-க்குக்  கடனளிப்பதற்கு ரிம950 மில்லியன்  ஒதுக்கப்பட்டிருப்பதாக  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.அதிலிருந்து  ரிம60 மில்லியன்  ரிங்கிட்டை  அந்நிறுவனம்  பயன்படுத்திக்  கொண்டிருக்கிறது.

“ரிம950 மில்லியன்  ஒரு  வணிகக்  கடனாகத்தான்  கொடுக்கப்படுகிறது”, என்று  அருள்  குறிப்பிட்டார்

“அதிலிருந்து  எடுக்கப்படும்  பணம்  நிதி  அமைச்சின்  ஒப்புதலைப்  பெற்ற  திட்டங்களுக்கு  மட்டுமே  பயன்படுத்திக்  கொள்ளப்படும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.