மத மாற்ற விவகாரத்தில் சிக்கிய மாணவன் தற்கொலைக்கு முயற்சித்தான்

 

Boyinreligioustrap1இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் சிக்கிய ஒரு 14 வயது மாணவனான தியாகுருடீன் கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான்.

நேற்று காப்பியில் பாரகுவாட் பூச்சிக்கொல்லியை கலந்து அருந்தியதாக தியாகுருடீன் தம்மிடம் ஒப்புக் கொண்டதாக அம்மாணவனின் தந்தை எஸ். கேசவன் மலேசியாகினியிடம் கூறினார்.

தற்போது சிறம்பான் துவாங்கு ஜாப்பார் மருத்துவமனையில் அச்சிறுவன் இருக்கிறான்.

“தன்னை அவர்கள் (சமய இலாகவினர்) மீண்டும் கூட்டிக் கொண்டு போய் தொல்லை கொடுப்பார்கள் என்று தாம் அஞ்சுவதாக தமது மகன் தம்மிடம் கூறினான். இதையே அவன் மருத்துவர்களிடமும் போலீசாரிடமும் கூறியுள்ளான்”, என்று கணேசன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, தன்னை நெகிரி செம்பிலானில் பெப்ரவரி 13 இல் ஓர் இஸ்லாமிய சமய மையத்தில் அடைத்து வைத்து தமது தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்யும்படி தம்மை இரு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினர் என்றும், இஸ்லாமிய விவகார இலாகா அதிகாரிகள் கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தினர் மூன்று மணி நேரத்திற்கு மேல் தம்மை விசாரித்தனர் என்றும் தியாகுருடீன் போலீஸ் புகார் செய்திருந்தான்.

போர்ட்டிக்சன் மாவட்ட கல்வி இலாகாவின் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி கணேசன் செய்திருந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இரு வாரங்களுக்கு முன்பு மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.

பயத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் தியாகுருடீன் பள்ளிக்குச் செல்ல மறுத்து வந்ததாக அவனது தந்தை கூறினார்.

நேற்று பிற்பகல் மணி 1க்கும் 1.30 க்கும் இடையில் தியாகுருடீன் அந்த விஷத்தைக் குடித்திருக்கிறான்.

இந்த விவகாரத்தில் கணேசனுக்கு உதவி அளித்து வரும் பிகேஆரின் எஸ். ஜெயதாஸ் சிறுவனின் தற்கொலை முயற்சிக்கு சமய அதிகாரிகளையும் தியாகுருடீனின் ஆசிரியர்களையும் குறைகூறினார்.

“ஏதேனும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்”, என்றார்.