பிகேஆர்: கைது செய்வது நீதிமன்றம் தொடர்ந்து அவமதிக்கப்படுவதைக் காட்டுகிறது

 

PKRarrestcontemptஅரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி அமைதியான பேரணிகளில் பங்கேற்பவர்களைக் கைது செய்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று பலதரப்பினர் போலீசாரை சாடியுள்ளனர்.

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த கித்தா லவான் பேரணியில் பங்கேற்றதற்காக மேலும் மூவர் கைது செய்யப்பட்டதற்காக இன்று காலையில் பிகேஆர் இளைஞர் பிரிவு போலீசை சாடியது.

அமைதியாக கூடுதல் சட்டம் செக்சன் 9(5) அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்று, டிஎபி ராசா நாடாளுமன்ற உறுப்பினர் தியோ கோக் சியோங், தன்னார்வலர்கள் ஆடம் அட்லி அப்துல் ஹலிம் மற்றும் மண்டீப் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பெர்சே நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இக்கைதுகள் மக்களின் சட்டப்பூர்வமான ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையைப் பறிப்பதாகும் என்று கூறிற்று.