நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் ஸ்டீவன் திரு அம்மன்றத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய உதவித் தலைவராக ஜியோர்ஜ் வர்கீஸ் தேர்வு செய்யப்பட்டார். கேரன் சியா மற்றும் பாரீட் அப்துல் கபூர் ஆகியோர் முறையே செயலாளராகவும், பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிரான வழக்குரைஞர் மன்றத்தின் நிலைப்பாட்டை புதிய தலைவர் ஸ்டீவன் திரு மறு உறுதிப்படுத்தினார். அதே வேளையில், அம்மன்றம் இந்த விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஜி100 உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டாலும் அதை முன்மொழிந்ததற்காக அவர்களை திரு பாராட்டினார்.
மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுவது வழக்கமானதே. அதனை மன்றத்தின் முன்வைத்து விவாதிப்பது சரியான முறையாகும் என்றாரவர்.
“ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து உறுப்பினர்களாலும் மதிக்கப்படும் என்றும் நாம் நம்புகிறோம்”, என்று ஸ்டீவன் திரு கூறினார்.
வாழ்த்துகள்!!!
திரு ஸ்டீவென் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
மன்றத்தின் கோட்பாடுகளுக்கு ஒப்ப அதனை பாரபட்சம் இன்றி வழிநடத்தினால் பிரச்சனை இல்லை. விவேகமாக நடந்துக் கொண்டால் ‘தன்னலமற்ற’ நீதிபதி பதவி ஒற்று காத்திருக்கு!.
இறந்து போன நீதிக்கு, யார் தலைவரானாலும் மீண்டும் உயிர் வாழாது நீதி,umno ஆட்சி தொடரும் வரை.