டிஎபி ராசா நாடாளுமன்ற உறுப்பினர் தியோ கோக் சியோங், ஆடம் அட்லி மற்றும் மண்டீப் சிங் ஆகிய மூவரும் அன்வார் ஆதரவு கித்தா லவான் கோலாலம்பூர் பேரணியில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் தியோ இன்று பின்னேரத்தில் விடுவிக்கப்படுவார். மற்ற இருவரும் செவ்வாய்க்கிழமைதான் விடுவிக்கப்படுவார்கள்.
தியோ நாளை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதால் மஜிஸ்திரேட் எரி ஷாரிமான் அவருக்கு ஒரு நாள் காவல் உத்தரவிட்டார். மற்ற இருவரையும் மூன்று நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மஜிஸ்திரேட்டின் இம்முடிவு அதிர்ச்சி அளிப்பதாக அவர்களின் வழக்குரைஞர் எரிக் பால்சன் கூறினார்.
போலீசார் இவர்கள் தப்பி விடுவார்கள் என்ற பிரச்சனை எதனையும் எழுப்பவில்லை. இம்முடிவை மஜிஸ்திரேட்டே எடுத்ததாக அவர் மேலும் கூறினார்.
“இது முட்டாள்தனமானது. அவர்கள் அறிமுகமான தன்னார்வலர்கள். இதற்கு முன்னதாக அவர்கள் போலீசாரின் விசாரணையில் ஒத்துழைத்துள்ளனர்”, என்று பால்சன் கூறினார்.
சட்டம் ஓர் இருட்டறை என்று அவர்களும் தெரிந்து வைத்திருக்கட்டுமே.
மக்கள் ஒன்றுப்பட்டால் சட்டத்திற்கு வெளிச்சம்காட்டலாம்.அம்னோவிற்கு தண்ணிரும் காட்டலாம்.
என்ன கொடுமை சார்?
கேட்க கவலையாக இருககிறது.
அவர்கள் என்ன அவ்வளவு பெரிய தீவிர வாதிகளா ?.
எங்கேட செல்கிறது இந்த நாடு.
கொலை செய்தவனை தப்பிக்க விட்டு விட்டு டீடுவணுங்க சாதாரண விஷயம் செய்தவர்களை பிடித்து வைபானுக்க .இது தான் நம்ம நாட்டு போலிஸ் .