பிரதமர் இன்னொரு தனி ஜெட் விமானத்துக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறாராம்

jetகூட்டரசு  அரசாங்கம்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பயன்படுத்திக்  கொள்வதற்கு  ஒரு  புதிய  ஜெட்  விமானம்  வாங்குவதாக  பிகேஆர்  தலைமைச்  செயலாளர் ரபிஸி  ரம்லி  இன்று  கூறினார்.

விமானம்  வாங்குவதை  உறுதிப்படுத்தும்   தவணைமுறை கொள்முதல்  ஆவணம்  ஒன்றையும்  ரபிஸி  செய்தியாளர்களிடம்  காண்பித்தார்.

1மலேசியா  என்று  எழுதப்பட்ட  அப்புதிய  விமானத்தின்  நிழற்படத்தையும்  அவர்  காண்பித்தார். அதன்  பதிவு  எண் 9H-AWK.

அவ்விமானத்தின்  விலை  ரிம28.8 மில்லியன்  என்றும் அதனைப்  பராமரிப்பதற்கு  ஆண்டுக்கு ரிம5.5 மில்லியன்  செலவாகும்  என்றும்  அவர்  சொன்னார்.

“விமானம்  வாங்குவதற்குப்  பெரும்பணம்  செலவிடப்பட்டுள்ளது. எல்லாமே  சாமர்த்தியமாக  செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த  வாரங்களில்  அது  அம்பலப்படுத்தப்படும்”, என்ற  ரபிஸி  அரசாங்கத்தின்  எதிர்வினைக்காகக்  காத்திருப்பதாக  தெரிவித்தார்.