பிரதமர்: வெள்ளம்மீது ஆர்சிஐ தேவையில்லை

floodஅண்மையில்  நாடு  முழுவதிலும்  ஏற்பட்ட  வெள்ளப்  பெருக்கால்  ஏற்பட்ட  பாதிப்புகளைச் சரிசெய்யும்  நடவடிக்கைகள்  இப்போது  நடைபெற்று  வருவதால்  வெள்ளத்தின்மீது  அரச  விசாரணை  ஆணையம் (ஆர்சிஐ)  அமைக்க  வேண்டிய  அவசியமில்லை  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  பகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணிகள்  நடைபெறுவதுடன்  வெள்ளப்  பிரச்னைகளைத்  தீர்ப்பதற்கு  அரசாங்கம்  தொடக்க  ஒதுக்கீடாக  ரிம800 மில்லியனை  ஒதுக்கியுள்ளது   என  நஜிப் (பிஎன் -பெக்கான்)  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

எனவே, ஆர்சிஐ  தேவையில்லை.

ஆனால், வெள்ளம்  தொடர்பான  நிலையான இயக்க  நடைமுறைகளையும் நிவாரணப்  பணிகளையும் மறு ஆய்வு  செய்ய  வேண்டிய தேவையிருப்பதாக  பிரதமர்  குறிப்பிட்டார்.