அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் இறப்பின்மீது தீர விசாரணை நடத்த போலீசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்துள்ளார்.
அவரது மரணத்தை விசாரித்த கொரோனர் வழங்கிய திடமில் தீர்ப்பை முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து போலீஸ் கடந்த செப்டம்பரில் அவரது இறப்புமீதான விசாரணையை மீண்டும் தொடங்கியது.
“போலீஸ் விசாரணை நடத்த எல்லாத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும், இதை அரசியலாக்கக் கூடாது.
“மேலும், மக்களுக்குக் குழப்பைத் தரக்கூடிய வகையிலும் அமலாக்கத் துறைகளின் பேரைக் கெடுக்கும் வகையிலும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என்பதையும் நினைவுறுத்துகிறோம்”, என்று ஐஜிபி கேட்டுக்கொண்டார்.
மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) விசாரணைக்கு அழைக்கப்பட்ட தியோ, 2009, ஜூலை 16-இல், எம்ஏசிசி கட்டிடத்துக்குப் பக்கத்திலேயே இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
கடந்த வாரம், டிஏபி-இன் கூலாய் எம்பி, தியோ நை சிங், தியோ-வை விசாரணை செய்த அதிகாரிமீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், அவரை விசாரணை செய்த அதிகாரிகளில் ஒருவரான முகம்மட் அனுவார் இஸ்மாயிலுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதாகவும் நெகிரி செம்பிலான் இயக்குனராக இருந்த அவர் சாபா இயக்குனராக மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
ஆமாம் கூடுதல் வாகாசம் தேவை ,,எப்படி உருட்டு பெரட்டல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்ட வேண்டும் அல்லவா