பிகேஆரின் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் நேற்று பிற்பகல் மணி 3 அளவில் கைது செய்யப்பட்டது நேற்றிரவு மணி 11 அளவில் உலக முன்னணி நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்பட்டது.
அசாஹி சிம்புன், ஜப்பான், பிபிசி பிரிட்டன், நியுயோர்க் டைம்ஸ், சிட்னி மோர்னிங் ஹெரால்ட் ஆஸ்திரேலியா, த ஹிண்டு, இந்தியா, பேங்கோக் போஸ்ட், தாய்லாந்து மற்றும் மணிலா டைம்ஸ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாளிதழ்களில் நூருல் கைது செய்யப்பட்ட செய்தி வெளியிடப்பட்டது.
பிரிட்டன் பைனேன்சியல் டைம்ஸ், யுஸ் வால் ஸ்திரிட் ஆகிய உலக நிதி சம்பந்தப்பட்ட நாளிதழ்களும் இச்செய்திக்கு இடமளித்தன.
“சிறையிலடைக்கப்பட்டுள்ள மலேசிய எதிரணித் தலைவரின் மகள் கைது செய்யப்பட்டார்” என்ற தலைப்பைக் கொண்டிட்ருந்தது நியுயோர்க் டைம்ஸ் செய்தி.
மலேசிய அரசாங்கம் தொடர்ந்து தேசநிந்தனைச் சட்டம் 1948 ஐ பயன்படுத்தி வருவதும் அச்செய்திகளில் இடம்பெற்றுள்ளன.
தலைக்கனம் அதிகமாகிவிட்டது.
அப்பாவின் பேர்சொல்லும் பிள்ளை தப்பாது பிறந்துள்ளது.தேசநிந்தனை சட்டம் ஆளும்கட்சி என்றால் வாலை சுருட்டி கொல்லும்லே!
அவங்க குடும்ப்பம் ஜெயிலுக்கு போனால் அவங்க கட்சி வக்கீல் ஜாமீன் எடுபங்க நீங்க யாரும் ஜெயிலுக்கு போனால் உண்ணக அம்மா அப்பா பெண்சதி புள்ளைங்க தான் வரணும் புரிஞ்சத அப்பரம் போலிஸ்கரன் அடிக்கிறான் கொள்ளுறன் நீங்க தான் அலையுனும் தமிழ ஜகிரதை