அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி ஹம்சா, தாம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கம் அளிக்கும் உத்தரவாத கடிதங்களோ நிதி விவகாரங்கள் தொடர்பான மற்ற ஆவணங்களோ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதுதான் வழக்கம் என்றார்.
அரசாங்கம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) கடன் பத்திரங்களின் தொடர்பில் ரிம11 பில்லியன் ஆதரவுக் கடிதம் அளித்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாதது சரியா என்று ரபிஸி ரம்லி (பிகேஆர்- பாண்டான்) வினவியதற்கு குவா மூசாங் எம்பியான தெங்கு ரசாலி இவ்வாறு கூறினார்.
“எனக்கு இது புதிய செய்தியாக இருக்கிறது. நான் அறிந்தவரையில், உத்தரவாதக் கடிதமாக இருந்தாலும் சரி நிதி சம்பந்தமான வேறு எந்த ஆவணமாக இருந்தாலும் சரி நாங்கள் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் வழக்கம்”. என்றார்.
நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருப்பதை மீண்டும் வலியுறுத்திய தெங்கு ரசாலி, இப்போதைக்கு பொருள், சேவை வரியைத் தள்ளிவைப்பதுதான் நல்லது என்ற தம் கருத்தையும் திரும்ப எடுத்துரைத்தார்.
அராஜக ஆட்சியில் நடைமுறைகளை எதிர்பார்க்க முடியாது!