வெள்ள நிவாரண நிதியில் ரிம462 மில்லியனுக்கு கணக்கு எங்கே?

lokeதீவகற்ப  மலேசியாவில்  கடந்த  ஆண்டு  ஏற்பட்ட  வெள்ளத்தை  அடுத்து  வெள்ள  நிவாரணப்  பணிகளுக்காக  ஒதுக்கப்பட்ட  ரிம800 மில்லியனில்  ரிம462 மில்லியன்  எப்படிச்  செலவிடப்பட்டது  என்பதை  அரசாங்கம்  விளக்க  வேண்டும்  என  டிஏபி  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

இதுவரை ரிம338 மில்லியனுக்கு  மட்டும்தான்  அரசாங்கம்  கணக்குக்  கொடுத்திருக்கிறது  என  அக்கட்சியின்  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லோக்  கூறினார்.

நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  நாடாளுமன்றத்தில்  தம்  கேள்விக்கு  எழுத்துப்  பூர்வமாக  அளித்த பதிலில்  மீதமுள்ள  ரிம462 மில்லியனுக்கான  திட்டங்கள் பற்றி  எதையும்  குறிப்பிடவில்லை  என்றாரவர்.

“கணக்குக்  காட்ட  வேண்டிய  பொறுப்பு  அவர்களுடையது. ஒதுக்கப்பட்ட  பணம்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோரைச் சென்றடைந்ததா?”, என்று  லோக்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  வினவினார்.