அன்வார் இப்ராகிமின் மூத்த மகள் நூருல் இஸ்ஸாவை விடுதலை செய்த போலீசார் அடுத்து அவரின் தங்கை நூருல் நூஹாவை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.
இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையம் சென்றிருந்தபோது தம்மை அணுகிய போலீசார் தம்மிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய விரும்புவதாக தெரிவித்தனர் என நூருல் நூஹா மலேசியாகினியிடம் கூறினார்.
“எப்போது போலீஸ் நிலையம் வர வேண்டும் என்பதை (என் வழக்குரைஞரிடம்)த் தெரிவிப்பதாக சொன்னார்கள்”, என்றாரவர்.
மார்ச் 7 கித்தா லவான் பேரணி தொடர்பாக போலீசார் தம்மை விசாரிக்க விரும்புவதாக அவர் கூறினார். மேல்விவரம் எதுவும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.
அன்வாரை விடுவிக்கக் கோரி சனிக்கிழமை தோறும் நடக்கும் பேரணிகளில் நூருல் நூஹா தவறாமல் கலந்துகொண்டு வந்திருக்கிறார்.
நூருல் பயப்பாடாதே இது பயமுறுத்தும் வேலை…………..
அன்வாரை சிரையிலிட்டதின் வாயிலாக ஐந்து அடிக்கு சவக்குழியை தோண்டிக் கொண்டது பாரிசான். நுருல் இசாவை கைது செய்ததின் மூலம் சவக்குழியின் ஆழம் பத்து அடியாகிவிட்டது. மேலே ஏறி வரமுடியாத அளவிற்கு மேலும் மேலும் பாரிசானின் சவக்குழி ஆழமாகிறது. சந்தோசம்!
மலைய்கர தலைவருக்கு கணிர்விடும் தமிழனுக்கு வாழ்துகள். அனல் தமிழ்னுகாக கவலை படும் தலைவர்கள் இளைய பாவமாய சமுதாயம்
அடுத்து மிச்சம் இருப்பது அன்வாரின் பேர பிள்ளைகள்தான். அவர்களிடமும் விசாரணை செய்ய முடியுமா என்று பாருங்கள்!.