ஐஜிபியை நாடாளுமன்றம் கண்டிக்க வேண்டும், பிகேஆர் கூறுகிறது

 

igpநாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ததற்காக போலீஸ் படை தலைவரை (ஐஜிபி) கண்டிக்க பக்கத்தான் ரக்யாட் ஒரு தீர்மானத்தை முன்மொழியவிருக்கிறது.

பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அவரது தந்தையின் உரையை நாடாளுமன்றத்தில் வாசித்தது தேசநிந்தனை குற்றம் என்று கூறி அதற்காக அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நாட்டின் தலைமை போலீஸ் அதிகாரியின் மனதில் இந்நாட்டின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை பதிய வைக்க வேண்டும் என்று அவர் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறுகிறார்.

நாடாளுமன்ற அவைகள் சட்டம் செக்சன் 7 இன் கீழ் பக்கத்தான் இக்கண்டனத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றாரவர்.

இச்சட்டத்தின் செக்சன் 7 நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் கூறிய ஒன்றுக்காக அவரை சிவில் அல்லது கிரிமினல் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது என்று கூறுகிறது.