1993 ஷியாரியா குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காகக் கொண்டுவரப்படும் சட்டவரைவை எதிர்ப்பவர்களைச் “சமய நம்பிக்கையற்றவர்கள்” என வருணித்திருக்கிறார் கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப்.
இன்று அச்சட்டவரைவை கிளந்தான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அஹ்மட், அவர்கள் அதைக் “கொடூரமானது, மனிதத்தன்மையற்றது” என்று குறைகூறியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
“அது கண்மூடித்தனமான குற்றச்சாட்டு”, என்றாரவர்.
அச்சட்டம் முஸ்லிம்-அல்லாதாரிடம் அமல்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தையும் அஹ்மட் தெரிவித்தார்.
“இது முஸ்லிம்களிடையே மட்டும்தான் அமல்படுத்தப்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
“அதாவது இச்சட்டம் முஸ்லிம்-அல்லாதார்மீது பயன்படுத்தப்படாது”, என்றவர் வலியுறுத்தினார்.
சைவனாகிய எமக்கு எம் சமயத்தின் மீது நம்பிக்கை இருக்குமா அல்லது மாற்றான் வீட்டு மதத்தின் மீது நம்பிக்கை இருக்குமா?. நீங்கள் கைகளையாவது அல்லது கால்களையாவது வெட்டிக் கொள்ளுங்கள் எங்களிடம் உங்கள் மத நம்பிக்கையை திணிக்க வேண்டாம். இதுவே எங்கள் வேண்டுகோள்.
சட்டத்திற்கே இப்போது மரியாதில்லை! உத்திரவாதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
இந்தச் சட்டம் முஸ்லிகளுக்கு மட்டும் தான் முஸ்லிம் அல்லாதோருக்கு அல்ல என்பது உண்மையானால், இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டவுடன் முஸ்லிம்கள் மதம் மாற அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த சட்டம் வேண்டாம். நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை செயல் வடிவம் கொடுக்க நினைப்பது நியாயம் இல்லை.மத இன நல்லிணக்கம் அணைத்து மக்களுக்கும் செயல் வடிவம் பெறுவது தற்போதைய காலத்தின் சூழ்நிலை. பாஸ் கட்சி இதனை கருத்தில் கொள்வது நல்லது.
மலேசியா ஒரு இஸ்லாமைய நாடு ……………..என்பதற்கு இந்த சட்டம் ஒரு புல்லையார் சூலி ……….அப்புறம் நாம் அனைவரும் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டவர்கள் .( இஸ்லாமிய நாடு )….நம்கையை கொண்டே நம் கண்ணை கூத்தி கொண்ட கதைதான் ……….?
இனிமேல் எல்லாம் சுத்தமாயிடுவானுங்க ! ஜெயில் , கோர்ட் .போலிஸ் எல்லாம் விரால் மீன் பிடிக்க போலாம்.
இவனைப்போன்றோர் எல்லாம் கண்ணிருந்தும் குருடுகள். இவனெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் இருக்க வேண்டியவன்கள்– மூட-ஈன ஜென்மங்கள். அதை ஏற்பவர்கள் ஏற்கட்டும். அதை மற்றவர்களுக்கு திணிக்க கூடாது.
பொய் சொல்லாதீர்கள் தலைவர் அவர்களே . 10 அல்லது 20 வருசங்களில் ஹுடுட் எல்லோருக்கும் என்று சொல்வீர்கள் .
மைக்கா எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு அவன்களின் எச்சிலுக்காக காத்து கொண்டிருக்கும் பொது என்ன செய்வான்கள்
தேனீ , எல்லாம் மெது மெது வாகதான் வரும். அடுத்தவர் மதத்திற்கு !
நமது நாட்டில் மட்டும்தான் உலகில் எங்கும் இல்லாத இரண்டுவித நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.ஓன்று சிவில்.இன்னொன்று ஷரியா நீதிமன்றங்கள்.சில வழக்குகளில் இரண்டும் முரண்பாடான தீர்ப்புகளை வழங்குகின்றன.இது பல இனங்கள் வாழும் இந்நாட்டில் தேசிய ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.இங்கு மத அடிப்படியில் ஒரு நீதிமன்றமும் சிவில் அடிப்படையில் ஒரு நீதிமன்றமும் செயல்படுவது என்பது ஒரே போத்தலில் இரு தேள்களை அடைத்து வைப்பதற்கு சமமாகும்.இது பல்லினங்கள் வாழும் மலேய்சியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல.
பழமைவாதிகள். இனிஅந்த மாநில முஸ்லிம்கள் தவருசெயிதால் கை.கால் இருக்காது போல. !
இப்பொழுது முஸ்லிம்களுக்கு அப்புறம் எல்லோருக்கும் .வாய் கிழிக்கும் அரசியல்வாதிகள் ,சங்க மற்று அமைப்பு தலைவர்கள் எல்லாம் இப்பொழுது காணோம். பதுங்கிவிட்டர்கள்.வந்தததை நினைத்து கவலைபடுகிரத இனி வரப்போவதை எண்ணி கலந்குகிறதா!
சுதந்திரம் கிடைக்கும்போது பூமிபுத்ராக்கள் என்ற பிரிவினை இல்லையே! எல்லோரும் மலேசியர்களாகவே இருந்தோம். ஆனால் 1969ம் ஆண்டுக்கு பிறகு துன் அப்துல் ரசாக்கும், துன் டாக்டர் இஸ்மாயிலும் மலாய்காரர்களுக்கு தனி அந்தஸ்து என்ற வகையில், மலேசியர்கள் கூறு போடப்பட்டனர். பூமிபுத்ரா, மலேசிய பிரஜை, பிரஜை அல்லாதவர் என்று வகுக்கப்பட்டனர். சுதந்திரத்தின் போது நினைத்தும் பார்க்காததை சுதந்திரத்திற்கு பின்னர் மலாய்காரர்களின் பெரும்பான்மை பலத்துடன் சட்டமாக்கினர். இப்ப கொண்டு வரப்படும் குடுட் சட்ட வரைவை சட்டமாக்கினால், இனி வரும் காலங்களில் மலேசியர்கள் அனைவரும் இச்சட்டத்தை பின்பற்றியே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்க படுவார்கள். அகவே பல இனமும் மதமும் கலந்து வாழும் மலேசிய நாட்டில் இப்படிபட்ட மத இன அடிப்படையிலான சட்டங்களை இயற்றி மக்களிடையே பீதியை உருவாக்குவது முறையாகாது.
ஹுடுட் சட்டத்தை அமல்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சியை பார்த்தால், மலேசியாவிலே உங்கள் மாநிலத்தில் (KELANTAN) வாழும் முஸ்லீம்களே மிகவும் கொடுரமானவர்கள் போல் சித்தரித்து கிளந்தான் வாழ் முஸ்லீம்களை கேவல படுத்துவதில்தான், எவ்வளவு சந்தோசம்/மகிழ்ச்சி உங்களுக்கு.
இனி அங்குள்ள அதிகமான அரசாங்க அமுலாக்க அதிகாரிகளுக்கு கை இருக்காது ….