நிஸார்: பாஸ் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும்

 

Nizarபாஸ் கட்சியில் பொறுப்பிலிருக்கும் எந்த ஓர் உறுப்பினருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களை மாற்றும் மற்றும் புதிய தலைவர்களை நியமிக்கும் உரிமை உண்டு என்று முகமட் நிஸார் ஜமாலுடின் கூறுகிறார்.

கட்சி தலைவர்களிடையே காணப்படும் மோதல்கள் பற்றி கருத்துரைத்த பாஸ் மத்திய குழு உறுப்பினரான அவர் கட்சியின் தலைமைத்துவம் மாற வேண்டும் என்றார்.

“கட்சித் தலைவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மூலமாகவே தெரிய வந்திருந்தால், அவர்கள் மாற்றப்பட வேண்டும்; அக்கடமை பேரளர்களைச் சேர்ந்தது, அது கட்சியின் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது”, என்று பேரா மாநில முன்னாள் மந்திரி புசாரான அவர் கூறினார்.

தமது கடமைகளை சிறப்பாக ஆற்றியுள்ளதால் பாஸ் கட்சியின் நடப்புத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பாஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கோப் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய நிஸார் இவ்வாறு கூறினார்.