ஹுடுட் சட்ட வரைவை பிஆர்எஸ் எதிர்க்கும்

masingபாஸ்  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யவுள்ள  ஹுடுட்  சட்டவரைவை  பிஎன்  ஆதரித்தாலும்  அக்கூட்டணியில்  உள்ள  கட்சிகளில்  ஒன்றான  பார்டி ரக்யாட் சரவாக்(பிஆர்எஸ்) ஆதரிக்காது.

“அதை நாங்கள்  எதிர்ப்போம். இதுதான்  எங்கள்  கட்சியின்  நிலைப்பாடு”, என  பிஆர்எஸ்  தலைவர்  ஜேம்ஸ்  மாசிங்  கூறினார்.

“எங்களின்  ஆறு  நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அச்சட்ட  வரைவுக்கு  ஆதரவு  கொடுக்க  மாட்டார்கள்”, என  மாநில  அமைச்சரவையில்  மூத்த  அமைச்சராகவுள்ள  மாசிங்  குறிப்பிட்டார்.