ஹிசாம் ரயிஸ் பல நபர்களால் “கடத்தப்பட்டார்”

 

Hishamkidnappedசமுதாய ஆர்வலர் ஹிசாம் ரயில் கித்தா லவான் குந்தியிருப்பு போராட்ட இடத்திற்கு அருகில் பல நபர்களால் “கடத்தப்பட்டார்”.

ஜாலான் துன் பேராக் வழியாக டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கையில் இச்சம்பவம் நடந்தது.

நடைபாதையிலிருந்து அவரை பிடித்து இழுத்து ஒரு வெள்ளி நிற காரினுல் திணிக்கப்பட்டார். அக்காருக்கு துணையாக மூன்று மோட்டார் சைக்கிள்கள் இருந்தன.

“மூன்று நபர்கள் அவர்களின் மோட்டார் சைக்களிலிருந்து இறங்கி அவரைப் பிடித்து காரினுல் தள்ளினர்”, என்று சம்பவத்தை நேரில் கண்ட லோ சீ சியோங் கூறினார்.

அந்த கார் படுவேகமாக ஜாலான் துன் பேராக் மற்றும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகியவற்றுக்கிடையில் திரும்பியது.

சில கித்தா லவான் ஆதரவாளர்கள் அக்காரைப் பின்தொடர்ந்து ஓடினர். அவர்களில் சிலர் காரில் இருந்தவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறிக்கொண்டனர்.

இதுவரையில், கித்தா லவான் பேச்சாளர்கள் ஹிசாமுடினை அதிகாரிகள் பிடித்துக் கொண்டு போனதாகக் கூறவில்லை. அவர்கள் இது குறித்து புகார் செய்வதற்காக டாங்வாங்கி போலீஸ் நிலையத்திற்கு வழக்குரைஞர்களை அனுப்பியுள்ளனர்.

ஹிசாமுடின் கைது செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டதற்கு, டாங்வாங்கி போலீஸ் தலைவர் ஸைநோல் சாமா அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

ஆனால்,  பின்னர் பல ஆதரவாளர்கள், பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா உட்பட,  டாங்வாங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.  அங்கு ஹிசாமுடின் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்களிடம் கூறப்பட்டது.