கித்தா லவான் பேரணியைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் முயன்றாலும் பேரணி திட்டப்படி நடக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்கள் நலனைக் கவனிக்கத் தவறிவிட்டார் அதனால்தான் மக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்துவது அவசியமாகி விட்டது என கித்தா லவான் செயலகம் கூறிற்று.
“மலேசியர்களாகிய நாம்தான் ஏதாவது செய்தாக வேண்டும்.
“நாமே பொறுப்பேற்று பொருள், சேவை வரிக்கு எதிராக போராட வேண்டியுள்ளது”, என்று அது கூறியது.
இன்றைய பேரணி மாலை மணி நான்குக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலை செய்ய அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்பதற்காக தொடங்கிய கித்தா லவான் பேரணி இப்போது ஜிஎஸ்டிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
பேரணியைத் தடுக்கும் நோக்கில், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ், பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி, பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு உள்பட பலர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்
உங்கள் முயற்சியையும், தைரியத்தையும் பாராட்டுகிறோம். ‘ஜனநாயக காவலர்களுக்கு’ என்னுடைய ஆசிகள்.
உண்மை ஜனநாயகம் மலரட்டும்!!!!!