பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தாக்கல் செய்யவுள்ள தனி உறுப்பினர் சட்டவரைவில் ஹுடுட் தண்டனைகள் பிரம்படிகள் என்ற அளவில்தான் இருக்கும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம்.
‘ஸினா’ (திருமணத்துக்கு முந்திய பாலுறவு), மது அருந்துதல், ‘கசாவ்’(ஒருவர் ஸினா குற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டுதல்) ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி தண்டனை வழங்க அது முற்படுகிறது என்றார்.
“அக்குற்றங்களுக்கும் பிரம்படி மட்டுமே கொடுக்கப்படும். கையை வெட்டுவதெல்லாம் கிடையாது”, என ஹுஸாம் நேற்றிரவு ஷா ஆலமில் கூறினார்.
“கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டத்தில் பல தண்டனைகள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் அமல்படுத்த இயலாது”, என்றாரவர். அதாவது கல்லெறிதல், கை, கால்களை வெட்டுதல், சிலுவையில் அறைதல் போன்ற தண்டனைகள் கிடையாதாம்.
முழுமையாக அமல் படுத்த இயலாத தண்டனைகளுக்காக/ கொள்கைக்காக ஏன் இந்த வீண் போராட்டம்??? முழுமையான இஸ்லாமிய நாட்டிலேயே இச்சட்டம் முறையாக அமல் படுத்த முடியவில்லை./ ஏற்றுக்கொள்ளப்படவில்லை..இதில், இஸ்லாமிய நாடற்ற இந்த நாட்டில் ஹுடுத் தண்டனையை அமல் படுத்த முனைவதை என்னவென்று சொல்வது???? இது வெறும் பகல் கனவே!!!!
குழப்புரான்.பிரம்படி இப்போது நடப்பில்உள்ளதே!
எத செஞ்சாலும் பிளான் பண்ணி செய்யணும்.
குழப்புரானுங்க, குழம்ரானுங்க, தெளிவான, முற்போக்கு சிந்தனை கிடையாது. இது தேவை இல்லாத விஷயம்.
Wall Street Journal:
Can Hudud laws be applied to non-Muslims?
Dr Basri: We must understand that in Islamic criminal law, we have to preserve two rights: the rights of Allah and the rights of the individual, regardless of whether the individual is Muslim or non-Muslim. Theft, armed robbery, false accusation – people who committed the crime, they transgressed the right of Allah, and they transgressed the right of the individual. But when it comes to Zina, you exercise your right. So this is between you and Allah.
That is why in Islam, for Zina, non-Muslims cannot be punished because they do not believe in this law. But in the case of theft … regardless of whether they are Muslims or not, they transgress the right of another. That is why they can be punished regardless of their religion. They can be punished under Islamic laws because this crime is related to the right of an individual.
நம் அரசியலமைப்பு படி தற்போது கெலந்தான் அரசாங்கம் சமர்பித்துள்ள ஹுடுத் சட்ட மசோதா செல்லுபடியாகாது. அடுத்து பாஸ் அரசாங்கம் தன இயலாமையை மறைக்கவும், மக்களிடையே தங்களின் சேவை மிக முக்கியம் எனும் பொய் தோற்றத்தை ஏற்படுத்தவே இச்செயலாகும்.
இந்நாட்டில் முஸ்லீம்கள்தான் “ஸினா” மற்றும் “கசாவ்’” போன்ற குற்றங்களில் பெருமளவில் ஈடுபடுகிறார்கள் என்று கூற வருவோர்களை இந்நாட்டில் வாழும் மற்ற இனத்தவர்கள் பாராட்ட வேண்டும்.