கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன

tuanபாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு,  பிகேஆர்  உதவித்  தலைவர்கள்  தியான்  சுவா,  ரபிஸி  ரம்லி  ஆகியோர்  கைது  செய்யப்பட்டதன்  விளைவாக  மக்களுக்கு  பிஎன்  மீதுள்ள  வெறுப்புத்தான்  அதிகரிக்கும்.

பக்கத்தான்  தலைவர்களையும்  மற்ற  சமூக  ஆர்வலர்களையும்  கைது  செய்த  போலீசாரின்  கடும்  நடவடிக்கையைக்  கண்டித்த  பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான், நியாயமான  காரணமின்றி  அவர்கள்  கைது செய்யப்பட்டிருப்பதாகக்  கூறினார்.

“அதிகாரிகளின்  கொடுரமான  நடவடிக்கையால்  பிஎன்  அரசாங்கத்துக்கு  எதிராக  மக்களின்  வெறுப்பு  வளரும்  போலீஸ்மீது  மக்களுக்குள்ள  மதிப்பும்  குறையும்”, என்றவர்  எச்சரித்தார்.

பொருள், சேவை  வரி, 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி),  அதிகார  அத்துமீறல்  போன்ற  விவகாரங்களுக்கு  மக்கள்  எதிர்ப்பு  காட்டுகிறார்கள்  என்றால்  அரசாங்கம்  அந்த  எதிர்ப்பைச்  சந்திக்க  வேண்டும். எதிரணித்  தலைவர்களையும்  சமூக  ஆர்வலர்களையும்  கைது  செய்வது  மிரட்டுவது  போன்ற  செயல்களில்  ஈடுபடக்கூடாது  என  துவான்  இப்ராகிம்  கூறினார்.

“இது  பிஎன்னைக் கட்டுக்குள்  வைக்க  எதிரணி  பலமாக இருக்க  வேண்டும்  என்பதைத்தான்  காண்பிக்கிறது”.

எனவே, பக்கத்தான்  கூட்டணி  அதன்  வேறுபாடுகளுக்குத்  தீர்வுகண்டு அணியை  வலுப்படுத்த  வேண்டும்  என்று  துவான்  இப்ராகிம்  கேட்டுக்கொண்டார்.