கட்சித் தலைமையகத்தில் அதிரடிச் சோதனை ஒரு ‘மட்டுமீறிய நடவடிக்கை’

nikநேற்று  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  பிகேஆர் தலைமையகத்தில்  போலீஸ்  நடத்திய  அதிரடிச்  சோதனையும்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி ரம்லி  தொடர்ந்து  தடுக்கப்பட்டு  வைத்திருப்பதும் ‘மட்டுமீறிய  நடவடிக்கை’ என  பிகேஆர்  இளைஞர்  பிரிவு சாடியுள்ளது.

“தடுப்புக்  காவலில்  உள்ள ரபிஸியை  (அலுவலகத்துக்கு) அழைத்து  வந்து கித்தா  லவான்  பேரணிகள் மீதான  விசாரணை  என்ற  பெயரில்  அலுவலக  தளவாடங்களைக் கைப்பற்றியது  தேவையற்ற   செயலாகும்”, என பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  மாட்  கூறினார்.

நேற்று  ஆறு போலீஸ்  அதிகாரிகள்  ரபிஸியை அவரது அலுவலகத்துக்கு  அழைத்து வந்து  நான்கு  கணினிகளையும் ரபிஸியின்  சுற்றறிக்கை ஒன்றையும்  ரபிஸி  செய்தித்தாள்களுக்கு  அனுப்பி  வைத்த  பத்திரிகை  அறிக்கை  ஒன்றின்  பிரதியையும்  எடுத்துச்  சென்றனர்.

“இது மக்களை  மிரட்டுவதற்காகவே  திட்டமிட்டு  எடுக்கப்பட்ட  நடவடிக்கை. ஆனால், இப்படிக்  கைதுமேல் கைது  செய்வது  மக்களின், அதிலும்  குறிப்பாக  இளைஞர்களின்  உணர்வுகளைத் தூண்டிவிட்டு  அவர்களை  ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும்  எதிராக  போராட  வைக்கும்”, என்று நிக்  நஸ்மி  கூறினார்.