புதிய பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டம் ஐஎஸ்ஏ போல் தடுப்புக் காவலில் வைக்க வகை செய்கிறது

anti terror2015 பயங்கரவாத-எதிர்ப்புச்  சட்டவரைவு(பொடா), ஒருவரை  விசாரணையில்லாமல் காலவரையின்றிக்   காவலில் வைக்க  இடமளிக்கிறது. அதை  எதிர்த்து  நீதிமன்றத்தும்  செல்லவும்  இயலாது.

சந்தேகப்  பேர்வழிகள், தொடக்கக்  கட்டமாக  59  நாள்களுக்குத் தடுத்து வைக்கப்படலாம். அதன்  பின்னரே  பயங்கரவாதத்  தடுப்பு  வாரியத்தில் முன்னிலை  படுத்தப்படுவார்கள். அவ்வாரியம்  கூடின பட்சம்  ஈராண்டுவரை  அவர்களைத்  தடுத்து  வைக்க  உத்தரவிடலாம்.

தண்டனைக் காலம்  முடிந்த  பின்னர்  அது  மறுபடியும்  புதுப்பிக்கப்படலாம்.

அதேவேளை, ஒருவர்  சரியான  காரணத்துக்காகத்தான்  தடுத்து  வைக்கப்படுகிறாரா  என்பதை  முடிவு  செய்யும்  அதிகாரம்  அவ்வாரியத்துக்கு  உண்டு. அது  நினைத்தால் தடுப்புக்  காவலில்  வைக்கப்பட்டுள்ள  ஒருவரை  விடுவிக்கவும்  முடியும்.

அச்சட்டத்தின்கீழ்  காவலில்  வைக்கப்படுவதை  எதிர்த்து  நீதிமன்றங்களில்  வழக்காடவும்  முடியாது.

வாரியத்தில்  ஒரு  தலைவர், ஒரு துணைத்  தலைவர்  ஆகியோருடன்  மூன்றிலிருந்து  ஆறு  உறுப்பினர்கள்வரை  இருப்பார்கள்.

இச்சட்டவரைவை  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்தார்.