ரபிஸி, ஃபாரிஸ், ஹிஷாமுடின் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

freedபிகேஆர் தலைமைச்  செயலாளர்  ரபிஸி ரம்லி, கித்தா லவான்  ஒருங்கிணைப்பாளர்  ஃபாரிஸ்  மூசா, சமூக  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸ்  ஆகியோர் விடுவிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி  அறிவித்துள்ளது.

அன்வார்  இப்ராகிமின்  விடுதலைக்காக  நடத்தப்படும் பேரணி தொடர்பில் ரபிஸி வார  இறுதியில்  கைது செய்யப்பட்டு  மூன்று  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டார்.

ஃபாரிஸும்  ஹிஷாமுடினும்  சனிக்கிழமை  நடைபெற்ற  பேரணி தொடர்பில்  கைது  செய்யப்பட்டனர்.