முன்கூட்டி கட்டணம் செலுத்தி பெறும் சேவைக்கான கட்டணத்தை அதிகரித்த தொலைதொடர்ப்பு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் அவை பேசும்நேரத்தைக் கூட்டுவதாக சொன்னதை ஏற்றுக்கொண்ட அரசாங்கத்தின்மீது சமூக அமைப்புகள் “வெறுப்படைந்துள்ளன”.
“முன்கூட்டி பணம் செலுத்திப் பெறப்படும் சேவைக்கு 6% ஜிஎஸ்டி விதித்த டெல்கோ நிறுவனங்களுடன் அரசாங்கம் சமரசம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு ஜிஎஸ்டி-யை எதிர்க்கும் என்ஜிஓ-களின் கூட்டமைப்பு வெறுப்படைந்துள்ளது.
“பெரிய நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் அரசாங்கத்தின் செயல், நிலைமை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் அவர்கள் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு இன்னும் தயாராக இல்லை என்பதையும் காண்பிக்கிறது.
“பேராசை கொண்ட பெரிய நிறுவனங்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க நினைத்தால் அரசாங்கம் உறுதியாக நடந்து கொள்ள வேண்டும்”, என அந்தக் கூட்டமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் எம். நளினி கூறினார்.
இப்போது பயனீட்டாளர்களுக்கு, டெல்கோ நிறுவனங்கள் கூடுதல் பேசும்நேரத்தையும் குறுஞ்செய்தி வசதியையும் வழங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய ஒரு கூடுதல் வேலை ஒன்று வந்து சேர்ந்துள்ளது என்றாரவர்.

























