பிணையில் வெளிவந்த ஸூனார் மீண்டும் கைது

zunarகோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில் 9 தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்ட  அரசியல்   கேலிச்சித்திரக்காரர்  ஸுனார்  பிணைப்பணம்  கட்டிவிட்டு  வெளியில்  வந்த  30-வது  நிமிடம்  மீண்டும்  கைது  செய்யப்பட்டார்.

ஸுனார்- அவரது இயற்பெயர்  சுல்கிப்ளி  அன்வார்  அல்ஹாக்- டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ் தலைமையகத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டார்.  அங்கு  அவர்  முகநூல்  பக்கத்தில்  இடப்பட்ட  ஒரு  பதிவுக்காக 1998  தொடர்பு,  பல்லூடகச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்கப்படுவார்.

அவர்மீது  சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டு என்ன என்பது  தெளிவாக  தெரியவில்லை.

“மலேசியாவில்  15 மில்லியன்  முகநூல்  பயனர்கள்  உள்ளனர். யாராவது  ஒருவர்  என்னுடைய  பக்கத்தில்  பதிவிட்டிருந்தால்  எனக்கு  எப்படித்  தெரியும்?”, என  ஸுனார்  செய்தியாளர்களிடம் கூறினார்.