சிருலின் தாயார் மகாதிரை சந்திக்க விரும்புகிறார்

piahபாஸ்  தகவல் தலைவர்  மாபுஸ் ஒமார்,   போலீஸ்  அதிரடிப் படை   முன்னாள்  உறுப்பினரான  சிருல்  அஷார்  உமரின்  தாயார்  டாக்டர் மகாதிர்  முகமட்டை  சந்திப்பதற்கு  ஏற்பாடு  செய்கிறார்.

அல்டான்துன்யாவைக்  கொன்றதாகக்  குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்  மகனைப்  பற்றி  பியா  சமட்  முன்னாள்  பிரதமரிடம்  “ஏதோ  சொல்ல”  விரும்புகிறார்  என  , மாபுஸ்  கூறினார்.

“சிருல்  ஒரு  பலிகடா  ஆக்கப்பட்டிருப்பதால்  மகாதிரால்  அவரின்  மகனுக்கு  உதவ  முடியும்  என  பியா  நம்புகிறார்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அச்சந்திப்பின்  மூலம்  மங்கோலிய  பெண்ணான  அல்டான்துன்யாவைக்  கொல்லச்  சொன்னது  யார்  என்பது  தெரிய  வரும்  என்று  மாபுஸ்  எதிர்பார்க்கிறார்.