ஐஜிபி: மகாதிர் தேச நிந்தனைக் குற்றம் புரியவில்லை

igpஅல்டான்துன்யா  ஷாரீபு  கொலை, 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  போன்ற  விவகாரங்களை  எழுப்பிப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சாடிவரும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  மீறவில்லை  என்கிறார்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்.

“இவ்  விவகாரங்களை  மகாதிர்  மட்டும்  பேசவில்லை.  ஏற்கனவே  பலர்   பேசியிருக்கிறார்கள்.

“என்னைப்  பொறுத்தவரை  அது  தேச  நிந்தனைக்  குற்றமல்ல”, என்றார்.

மகாதிரின்  பதிவு  தொடர்பில்  இதுவரை போலீஸ்  புகார்  எதையும்  பெறவில்லை  என்றும்  காலிட்  கூறினார்.