மகாதிருக்கு எதிராக ஜாசா எதிர்நடவடிக்கை எடுக்கும்

 

Jasamahathirஜாசா என்ற சிறப்பு விவகாரங்கள் இலாகா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், அல்தான்துயா கொலை சம்பந்தமாக கேள்வி எழுப்பி இருப்பதற்கு எதிராக தாக்குதல் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

“நீதிமன்றம் முடிவெடுத்து விட்ட பின்னர் மகாதிர் ஏன் சிருல் (அஸ்கார் ஒமார்) பிரச்சனையை எழுப்ப வேண்டும்?

“இந்த பிரச்சனையை மகாதிர் எழுப்புவது புத்திசாலித்தனமானதல்ல, ஏதோ அவரிடம் புதிய சாட்சியங்கள் இருப்பது போல”, என்று அந்த இலாகாவின் தலைமை இயக்குனர் புவாட் ஸார்காஷி கூறினார்.

இந்தப் பிரச்சனையை முறையாகத் தீர்க்காவிட்டால், அது அரசாங்கத்தின் நிலையைப் பாதிக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.

“சமூக ஊடகங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல அரசாங்கங்கள் தேர்தலில் தோல்வி கண்டுள்ளன.

“இது இதர நாடுகளில் நடந்துள்ளது. இவ்வழியாக (சமூக ஊடகங்கள் வழியாக) அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை”, என்று புவாட் மேலும் கூறினார்.