மங்கோலிய பெண் அந்தான்துயாவை கொலை செய்ததற்காக மரணை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் தமது பாதுகாப்பாளராகவும் பணி புரிந்திருந்த தகவலை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று வெளிப்படுத்தினார்.
ஆனால், அந்த சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் கமாண்டோ சிருல் தம்மிடம் பணி புரிந்த போது அவர் எவரையும் கொலை செய்யவில்லை என்று மகாதிர் கூறினார்.
“அதைச் (கொலையை) செய்ததாக கூறப்படும் அந்த ஆள் எனது பாதுகாப்பாளர்களில் ஒருவர். அப்போது சிருல் என்னை கவனித்துக் கொண்டவர்.
“அப்போது அவர் எவரையும் கொல்லவில்லை. அது (கொலை செய்ய உத்தரவிட்டது) நானாக இருக்க முடியாது”, என்று மகாதிர் இளைஞர்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்துப்பரிமாற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
அல்தான்துயா கொலை 2006 இல் நடந்தது. அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பின் பாதுகாப்பாளராக சிருல் பணியாற்றினார்.
அல்தாந்துயா C4 வெடிகுண்டால் தூள் தூலாக்கப்பட்டவர். இந்த C4 வெடிகுண்டு தற்காப்பு அமைச்சின் பாதுகாப்பில் இருக்கும் பொருளாகும். 2006ல் இந்த வெடிகுண்டு சிருள் கைக்கு வந்ததெப்படி? அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்தவர் யார்? [விஷயங்கள் இவ்வளவு தெள்ளத்தெளிவாக இருக்கையில், அல்தாந்துயாவை கொல்லச் சொன்னது யார் என கிண்டலடிக்கிறார் இந்த மகாதிமிர்}
உண்மை வெகு விரைவில் உலகுக்கு அம்பலம் ஆகும் !!!!! வாழ்க 1 மலேசியா?????
கொல்லப்பட்டவர் ஒரு பெருச்சாளி …பாவம் சிருள்…அவளை விஷம் வைத்து கொன்றிருந்தால் கேஸ் க்லோஸ்..வெடிகுண்டு எதற்கு அப்பு …
கொல்லப்பட்டவர் ஒரு பெருச்சாளி என்று சொல்லுவது தவறு. ஒரு பெண். அவளுக்கும் இந்த உலகில் வாழ உரிமையுண்டு. அவள் வேறு ஒரு கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகியவள். அவள் தவறு செய்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. சாதாரண கொலையே தவறு. இப்படி ஒரு வெடுகுண்டு சாவு ……மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐ.எஸ். எப்போதோ நமது நாட்டுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது!
கிழவன் கையை நகர்த்துகிறான்.
2006 லேயே IS தீவிரவாதிகளைவிட மிகவும் கொடூரமான ஈவிரக்கமற்ற வகையில் ஒரு பெண்ணை கொலை செய்திருக்கின்றான் அந்த பாதகன்.”என்னிடம் பாதுகாப்பாளராக இருக்கும்போது அவன் யாரையும் கொலை செய்யவில்லை.” என்று மகாதீர் பிதற்றுவதை பார்த்தால் இவன் மூலம் அந்த கொலைகாரனுக்கு விடுதலை கிடைதுவிடும்போல் தெரிகிறதே.
கூடிஇருந்தே குழி பறிக்கிறார் மாமாக் மகாதிர்.
பாவம் நம் பிரதமர் நஜிப் அவர்கள்!
முன்னால் இபடீயிருந்தார் அப்படியிருந்தார் என்ற பேச்சிக்கே இடம்மில்லை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்குற்றமே ! பஞ்சமா பாதகதிற்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் நீதி வாழும் !
‘யாரையோ’ உள்ளுக்கு தள்ளப் பார்கிறார் மகாதிமிர்.
annuar அரசியல் வாழ்வை கொலை செய்தாய் !
ஓர் இன உறவு பெரிய குற்றம் என சிறை அடைத்தாய் . மொங்கோலியா மங்கையை கொலை செய்ய சொன்ன ஆள் வெளியில் உள்ளான் ! பாம்பின் கால் பாம்பறியும் ..!
என்னுடைய பாதுகாப்பாளராக பணி புரிந்திருந்தபோது சிருல் அஸார் எவரையும் கொலை செய்யவில்லை, அப்படியானால் கொலை செய்ய உத்தரவிட்டது நானாக இருக்க முடியாது. அதே சமயம் சிருல் அஸார் இக்கொலையை புரிந்தபோது அன்றைய துணை பிரதமராக இருந்த நஜிப்பின் பாதுகாப்பாளராக இருந்ததினால், நஜிப் ஏன் உத்தரவிட்டிருக்ககூடாது என்று கேட்கிறாரோ முன்னால் பிரதமர் மாமா மகாதீர்.