சுஹாகாம்: தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது

 

seditionதேச நிந்தனைச் சட்டம் 1948 தொடர்ந்து பயன்படுத்தப்படுவது “திகைக்க வைக்கிறது” என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) என்று தெரிவித்ததோடு புத்ரா ஜெயா அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்தரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

இச்சட்டம் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் மற்றும், ஏன், ஊடகப் பணியாளர்கள் மீது பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை ஆணையம் மிகக் கடுமையாகக் கருதுகிறது என்று கடுஞ்சொற்கள் அடங்கிய செய்தி அறிக்கையில் சுஹாகாமின் தலைவர் ஹாஸ்மி அஹாம் கூறுகிறார்.

இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் சமீபத்தில் கேட்டுக்கொண்டிருந்ததையும் மீறி கைது நடவடிக்கைகள்Hasmy அச்சமளிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் கையாளப்பட்ட முறைகள் ஆணையத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவை அதிகாரத்தினரால் தொல்லை கொடுத்தல், அச்ச்சுறுத்தல் மற்றும் சட்ட ஆளுமையை மீறுதல் ஆகியவற்றுக்கு சமமானதாகும் என்றும் ஹாஸ்மி கூறுகிறார்.

த மலேசியன் இன்சைடர் மற்றும் த எட்ஜ் ஊடகக் குழு ஆகியவற்றின் ஐந்து ஆசிரியர்கள் தேச நிந்தனைக்காக கைது செய்யப்பட்டது மலேசியா அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் அதன் கடப்பாட்டை மீறி விட்டதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது என்றார் ஹாஸ்மி.