கைரி: மசீச ஹூடுட் மசோதாவை அமைச்சரவையில் எதிர்க்கவில்லை

 

khairyhududசமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்களில் மசீசவோ இதர பிஎன் பங்காளிக் கட்சிகளோ ஹூடுட் சட்ட மசோதாவை எதிர்க்கவில்லை என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஆனால், ஹூடுட் மசோதா விவாதிக்கப்படவில்லை. “இது நடந்துள்ளது என்று கூறப்பட்டு, அது தாக்கல் செய்யப்பட்டது”, என்று அவர் செய்தியாளர்களிடம் கோலாலங்காட்டில் இன்று கூறினார்.

இவரின் இக்கூற்று மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய் கூறிக்கொண்டதற்கு எதிர்மாறானதாக இருக்கிறது. மார்ச் 20 மற்றும் 27 இல் அமைச்சரவை அதனை விவாதித்தது என்று லியோ கூறியிருந்தார்.

“இதர அனைத்து விவாதங்களும் பிஎன் நிலையில் பிஎன் தலைவர்களுக்கிடையில் நடத்தப்பட்டது. ஆனால், நான் அங்கு இல்லை”, என்று கைரி மேலும் கூறினார்.