1948 தேச நிந்தனைச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவருவது “அவமதிப்பதாக இருக்கலாம் ஆனால் சட்டவிரோதமானதல்ல” என்று கூறிய நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரியை வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கடிந்து கொண்டார்.
கூட்டரசு நீதிமன்றம் அச்சட்டம் அரசமைப்புக்கு ஏற்புடையதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்றும் அச்சட்டம் அரசமைப்புக்கு முரணானது என்று அது அறிவித்து விட்டால் அதற்குத் திருத்தம் கொண்டுவருவது நாடாளுமன்றத்தின் நேரத்தை விரயமாக்கும் வேலையாக அமையும் என்றும் அம்பிகா கூறினார்.
“அது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா என்பது பிரச்னையல்ல.
“கூட்டரசு நீதிமன்றம் அச்சட்டம் செல்லாது என்றுகூட அறிவிக்கலாம். எனவே, அதற்குத் திருத்தங்கள் கொண்டுவருவது பற்றி விவாதிப்பதுகூட நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்”, எனத் தேச நிந்தனைச் சட்ட ஒழிப்பு இயக்கத்தின் பேச்சாளர் என்ற முறையில் அம்பிகா குறிப்பிட்டார்.