மகாதிர்: ஜோ லவ் அரசாங்கத்தின் ஓர் அங்கமா?

 

D&Nபிரதமர் நஜிப்புக்கு எதிரானத் தாக்குதலைத் தொடரும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் சர்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் விவகாரத்தை விசாரிக்க “முற்றிலும் சுயேட்சையான ஆணையம்” அமைக்கப்படுவது அவசியமாகிறது என்று அவரது மிக அண்மையத் தாக்குதலில் கூறியுள்ளார்.

குறிப்பாக, பணம் எங்கே சென்றிருக்கிறது என்பதோடு இந்த வணிகர் ஜோ லவ் எப்படி இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டார் என்று மகாதிர் கேட்கிறார்.

“திடீரென்று மிக முக்கியமானவராக தோன்றியிருக்கும் இந்த ஜோ லவ் யார்?

“அவருக்கு எந்த ஓர் அதிரகாரப்பூர்வமான பதவியும் கிடையாது, அவர் அரசு பணியளரும் இல்லை. எப்படி திடீரென்று அவருக்கு அவ்வாறான அதிகாரம் கிடைத்தது?

“அவர்தான் அரசாங்கம் போல் நடந்துகொள்கிறார்” என்று என்னிடம் கூறுகின்றனர் (அது நிருபிக்கப்பட்டுள்ளது என்று என்னால் கூற முடியாது) என்று அவர் கூறியதாக நேற்று வெளியான ஐந்து யுடியூப் பதிவுகளில் ஒன்றில் கூறப்படுகிறது.

பிரிம் என்ற அரசாங்க உதவி, மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை மற்றும் கட்டி முடிப்பதற்கு நஜிப் வாக்குறுதி அளித்த வளைந்த பாலம் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இன்னொரு வீடியோ பதிவில் நஜிப் பதவி விலக வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அவர் கூறினார்.