நேற்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பாஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி கோலாலம்பூர், பாடாங் மெர்புக்கில் நடைபெற்றது.
சுமார் 3,000 பேர் கலந்து கொண்ட அப்பேரணியில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உரையாற்றினர்.
அப்பேரணியில் உரையாற்றிய அனைவரும் ஏப்ரல் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை வெகுவாகக் கண்டித்தனர்.
பாஸ் உலாமாக்கள் ஏற்பாடு செய்திருந்த அப்பேரணியில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவும் கலந்து கொண்டார்.
இவர்களில் எத்தனை பேர் கைதாவார்கள் ?????
ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பாக பாஸ் கட்சியினர் நாடெங்கும் பிரச்சார கூட்டங்க்கலை நடத்தினால் மக்களுக்கு அவர்களின் பக்கம் சற்று ஆதரவு அலை வீசும்…? இல்லையென்றால் வரும் தேர்தலில் கிளந்தானை தவிர மற்ற மாநிலங்களில் ஆதரவு சரியக் கூடும்..?