பாரிசான் தோற்றால், பலர் குற்றம் சாட்டப்படுவர்

 

அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் கூட்டணி தோல்வியுற்றால், பலர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்று முன்னாள் பிரதமர்MBnloss மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார்.

1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் விவகாரம் பற்றி கருத்துரைத்த மகாதிர் பிரதமர் நஜிப் பதவி துறக்க மறுத்தால் அந்த பெர்ஹாட் விவகாரம் அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் வீழ்ச்சிக்கு வழிவக்கும் என்றார்.

“அவர் (நஜிப்) விலகி விட்டால், பிஎன் ஜெயிக்கும். அதனால்தான் அது இப்போது நடைபெற வேண்டும், ஏனென்றால் நாம் மீட்சியடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன.

“ஆனால், நான் மிக அஞ்சுவது: எதிரணி வெற்றி பெற்று நாம் தோற்று விட்டால், எதிரணி கருணை காட்டாது.

“அவர்கள் புரட்டிப் புரட்டிப் பார்ப்பார்கள் (பதில் கிடைப்பதற்காக). அவர்கள் புரட்டினால், பலர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர், குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்படலாம்.

“ஆக, பிஎன் தோற்றால், அதிகமானோர் பெரும் விலை கொடுக்க வேண்டிய வரும்”, என்று மகாதிர் நேற்று யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு தனிப்பட்ட நேர்காணலில் கூறினார்.

1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் விவகாரம் குறித்த விசாரணையில் எதிரணியின் பங்கை அவர் வரவேற்றார். இதில் தேசிய கணக்காய்வாளர் ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்வார் என்பதில் மகாதிருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இருகட்சிகள் சார்ந்த நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு (பிஎசி), அவர்கள் அனுமதிக்கப்பட்டால், இதற்கான விடை காண முடியும்.

“பிஎசி, நான் நினைக்கிறேன், கேள்விகள் கேட்கும், ஏனென்றால் எதிரணி அதில் இருக்கிறது. ஆனால், எப்போது (அவர்கள் அனுமதிக்கப்பட்டுவர்)”, என்று மகாதிர் வினவினார்.