டாக்டர் மகாதிர் முகம்மட் சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
“ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமானால் 7 நாளும் 24 மணி நேரமும் அதுதான் வேலையாக இருக்கும்”, எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
“இதன் முடிவுதான் என்ன? (குற்றச்சாட்டுகளின்) நோக்கம்தான் என்ன?”, என்றவர் வினவினார்.
முன்னாள் பிரதமர், அம்னோ தலைவர்கள் பணத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறார்கள் என்று கூறியிருப்பது உள்பட எல்லாக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க வேண்டும்.
“நிரூபியுங்கள். (அமலாக்கத் துறைகள்) விசாரணைகளைக் கவனித்துக் கொள்ளும்”, என்று ஹிஷாமுடின் கூறினார்.
ஆமாம், ஆமாம் வாயை மூடிக் கொண்டிருந்தால் எல்லோரும் கத்தி, கத்தி ஓய்ந்து போய் விடுவார்கள் என்ற தந்திரமா இது. நிலைமை மாறி விட்டது அப்பனே. உங்களில் ஒருவன் கேள்வி கேட்பதால் பதில் வரவில்லை என்றால் கேள்வியே உண்மையாகி உங்கள் அரசியல் வாழ்வுக்கே உலை வைத்து விடும் என்பதை அறியாமல் அறிக்கை விடுகின்றீர்!.
ஹிஷாமுடின் செய்யும் பாவனைகளை நன்றாக கவனித்தால் ஓர் உண்மை புரியும். ‘அன்று நாங்கள் பதவிகளுக்காக மகாதிமிரை தூக்கு தூக்கு என்று தூக்கினோம். இன்றோ தூக்கத் தயாராயில்லை’. மகாதிமிரை எப்படி தூக்கினார் என்பதை செய்து காட்டுகிறார் பாருங்கள்.
மகாதீருக்கு பதில் அழிப்பது வீண் வேலைதான்…? இருந்தாலும் அவர்மேல் நடவடிக்கை எடுக்கலாமே…? எதற்கு வீண் வம்பு ஹிஜாமுடின்…!
மாமா மகாதீரின் “அல்தாந்துயாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார் ?” என்ற முக்கியமான் கேள்விக்கு பிரதமரால் பதில் சொல்ல முடியாவிட்டால், இந்த கொலையில் சம்பந்தபட்டவர்கள் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் பிரதமருக்கும் தொடர்பு உண்டு என்ற அழுத்தமான எண்ணம் அனுதினமும்
மக்களிடையே வலுபெற்று கொண்டே வருகிறது.
“பனை மரத்தின் கிழே நின்று கொண்டு நான் பால்தான் குடித்தேன்” என்று எத்தனை முறை கூறினாலும் மக்களோ அல்லது இந்த உலகமோ நம்ப தயாராக இல்லை.