பணி ஓய்வு பெற்றவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நஜிப்பை ஆதரிக்கிறார்கள்

pensionஇன்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  ஓய்வூதியர்  அறவாரியத்தைத்  தொடக்கிவைத்த   ஒரு  விழாவில்  அறவாரியத்தின்  தலைவர்  அசே  சே  மாட் விழாவுக்கு  வந்திருந்தவர்களை  நஜிப்புக்கு  ஆதரவு தெரிவிக்குமாறு  கேட்டுக்கொண்டார்.

“எல்லாரும்  எழுந்து  நிற்கிறீர்களா?”, என்றவர்   சொன்னார்.

ஆனால், எல்லாரும்  எழுந்திருக்கவில்லை; எல்லாருமே கைகளை  உயர்த்தவுமில்லை.

இதைக்  கவனித்த  நஜிப், பின்னர்  தம்  உரையில்  தம்மை  ஆதரிக்காதவரும்  உண்டு  என்பதை  ஒப்புக்கொண்டார்.

“உங்கள்  ஆதரவுக்கு  நன்றி. ஜனநாயகத்தில் 100 விழுக்காடு  கிடைப்பது  கடினம்  என்பதை  அறிவேன்.

“பணி  ஓய்வு  பெற்றோரில் மற்ற  கட்சிகளை  ஆதரிப்போரும்  உண்டு”, என்றவர்  சொல்ல  கூட்டத்தினர்  சிரித்தனர்.

“ஆனால், பெரும்பாலோர் (பிஎன்) ஆதரவாளர்கள்”, என்று  நஜிப்  கூறியதும்  கூட்டத்தினர்  கைதட்டி  ஆரவாரம் செய்தனர்.