மகாதிர் மரியாதையுடன் விசாரிக்கப்படலாம்

wanமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  விசாரணை  எதுவும்  நடத்தப்பட்டால்  மரியாதைக்குரிய  முறையில்  அது  நடத்தப்படும்  என உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  துவாங்கு  ஜப்பார்  கூறினார்.

வலைப்பதிவில்  பிரதமர்  நஜிப்பைக்  குறைகூறி வருவதன்  தொடர்பில்  மகாதிருக்கு  எதிராக  செய்யப்பட்டுள்ள  புகார்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா  என்று கேட்கப்பட்டதற்கு  வான்  ஜுனாய்டி  இவ்வாறு  பதிலளித்தார்.

போலீசார்  எல்லாப்  புகார்களையும்  விசாரிக்கக்  கடமைப்பட்டிருக்கிறார்கள். மகாதிர்மீதான புகார்களை  அவர்கள்  அடக்கமாக  விசாரிக்கக்கூடும்  என்றாரவர்.

“மகாதிர்  நீண்ட  காலம்  பிரதமராக  இருந்தவர். அவருக்கு  உரிய  மரியாதை  கொடுக்க  வேண்டும்.

“அதேவேளை  போலீசார்  என்ன  செய்ய  வேண்டுமோ  அதைச்  செய்வார்கள். யாருக்கும்  விலக்களிக்கப்படாது. எவரும்  சட்டத்துக்கு  மேலானவர்  அல்லர்”, என  வான்  ஜுனாய்டி  கூறினார்.