பாஸ் கட்சியில் அப்துல் ஹாடி ஆவாங்கைத் தலைவர் பதவியிலிருந்து இறக்கி கட்சியின் மூத்த உறுப்பினர் அஹ்மட் ஆவாங்கைத் தலைவராக்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அஹ்மட் தலைவர் பதவிக்குப் போட்டியிட போதுமான நியமனங்களைப் பெற்றிருக்கிறார்.
அஹ்மட் கட்சியைக் காப்பாற்றுவார் என அவரின் ஆதரவாளர்கள் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக மத்திய செயல்குழு உறுப்பினர் காலிட் சமட் கூறினார்.
“2008 பொதுத் தேர்தலின்போது அஹ்மட் பாஸைக் காப்பாற்றினார். அவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்காதிருந்தால் பேராக் பாஸ் அம்னோவுடன் சேர்ந்து மாநில அரசை அமைத்திருக்கும்.
“அஹ்மட்டால் பாஸ் உறுப்பினர்களை ஒன்றிணைக்க முடியும். பக்காத்தானுடனும் இணைந்திருக்க முடியும். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”, என்று அஹ்மட்டின் ஆதரவாளர்கள் விரும்புவதாக காலிட் அவரது வலைப்பதிவில் எழுதியிருந்தார்.
எல்லா அரசியல் கட்சிகளிலும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது என்பது நியதி போலும். அம்னோவில் நஜிப்பிற்கு கத்தி. பாஸ் கட்சியில் ஹடி அவாங்கிற்கு அரிவாள். ம.இ.கா. வில் பழனிக்கு வெட்டு. (இன்னும் வரும்]
இப்போதுள்ள தலைவன் போனால் தான் பி ஆர் உருப்படும்.