“அம்னோவில் உள்ளவர்கள் கதைகட்டுவதில் வல்லவர்கள்” என்று ‘ஈரோமனி’-க்கு அளித்த நேர்காணலில் கூறிய ஜோ லவ்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
டிவிட்டரில் அம்னோ இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிப்பதாகக் கூறிய கைரி 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) மீதும் ஜோ லவ்மீதும் விசாரணை தேவை என்றார்.
தி எட்ஜ் நிதியியல் நாளேட்டில் அம்னோவில் உள்ளவர்கள் கதைகட்டுவதில் வல்லவர்கள் என்று ஜோ கூறியதாக வெளிவந்த முதல்-பக்கச் செய்தியின் ஒரு பகுதியையும் கைரி டிவிட்டரில் இணைத்திருந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் தே.மு. – க்கு ஆதரவாக ஓட்டுப் போட இந்த ‘tauke’ பினாங்கு மக்களிடையே ‘Ang Pow’ விநியோகித்த பொழுது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையிடம் புகார் செய்யாத இந்த மந்திரி இப்போது யார் காதில் பூ சுற்ற இந்த அறிக்கை விடுகின்றார்?. கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பொய்யான அறிக்கை விடுவதில் மன்னர்கள் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் கழுசடை.
இந்த ‘tauke’ — வா 1MDB – யை வழி நடத்தினார்?. அம்னோ தலைவர்கள் மீது விழும் ஏவுகணை தாக்குதலை திசை திருப்ப ‘tauke’ -வை சுட்டிக் காட்டினால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மாமாக்தீர் பாணியையே இப்பொழுதும் அம்நோவிடம் காணுகின்றோம். 1997-ல் மாமக்தீரின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் வந்த அந்நிய நாணய பரிமாற்ற ரிங்கிட்டின் வீழ்ச்சியை திசை திருப்ப சோரோசைக் காரணம் காட்டி தப்பித்துக் கொண்டார். அதே பாணியை இன்றைய அம்னோ தலைவர்கள் கையாள ‘Jho’ – வை பகடைக்காயாக பயன்படுத்த துவங்கி உள்ளனர். நல்ல நாடகக் கதை ஆனால் முடிவு முன் கூட்டியே தெரிந்து விட்டதால் புஸ்வானமாகிப் போய் விட்டது.