ஏப்ரல் 4-இல் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த மர்ம பயணி அய்டானா பைஸியாவா, அந்த ஹெலிகாப்டரை ஓட்டுவதிலும் உதவியாக இருந்தார் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
செமினி அருகில் நிகழ்ந்த அவ்விபத்தில் ரொம்பின் எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ், பிரதமரின் தலைமை தனிச் செயலாலர் அஸ்லின் அலியாஸ் உள்பட அறுவர் கொல்லப்பட்டனர்.
ஹெலிகாப்டரில் இருந்த குரல் பதிவுக் கருவியில் பதிவான விவரங்களிலிருந்து அய்டானா ஹெலிகாப்டரை இயக்குவதிலும் மிக உதவியாக இருந்தார் என்பது தெரிய வந்திருப்பதாக அந்நாளேடு கூறியது.
அவருக்கும் ஹெலிகாப்டர் ஓட்டுனர் கேப்டன் கிளிப்பர்ட் போர்னியருக்குமிடையிலான உரையாடல் அதைக் காட்டுகிறது.
அதிகாரப் பூர்வமான அறிக்கை வருவதற்கு முன்னமே அம்னோவிற்கு ஆதாரவான பத்திரிகையில் ஆதாரபூர்வமற்ற செய்திகளை கசிய விடுவதேனோ?. யாரோ ஆட்டுவிகின்றார், இவர்கள் ஆடுகின்றனர்!.
இதென்ன புதுசா குருடா விடுறானுங்க. எங்கேயோ இடிக்குதே.
எங்கேயும் இடிக்கவில்லை— இதுதான் இன்றைய நிலை— தற்போதைய அரைவேக்காடு அதிகாரிகள்- எல்லாம் திரை போட்டு விடுவார்கள்– யார் அவர்களை தாங்க வில்லையோ அவர்களின் வாழ்க்கையையே வீணடித்து விடுவர்– அங்கு ஒரு காலத்தில் மலாய்காரங்கலையே பார்க்க முடியாது. இன்று வேறு யாரையுமே பார்க்க முடியாது– திறமைசாலிகள் என்றாலும் பரவாஇல்லை –எல்லாம் தோல் சம்பந்த பட்ட திறமை சாலிகள் தான் — இன்னும் எவ்வளவோ. சொன்னால் ஒரு புண்ணியமும் கிடையாது– பழைய குருடி கதவை திறடி.
மரியாதை உரிய JJ ஏன் மர்ம பெண்ணுடன் ஹெலிகாப்டரில் பிரயாணம் செய்தார் ?
மலேசியாவிற்கு வந்தாலே வெளிநாட்டு பெண்களுக்கு ஏழரை சனி இலவசமாக அவர்களுடன் ஒட்டி கொள்ளும் போலிருக்கிறது.
அன்று C4 வெடி வைத்து ஒரு பெண் கொல்லபட்டார்;
இன்று ஒரு பெண் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்ல படுகிறார்.
வெளிநாட்டு பெண்களை எப்படி கொலை செய்வது என்று விடிய விடிய யோசிப்பாங்க போலிருக்கிறது.