கடந்த ஆண்டு பினாங்கு சட்டமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த 16 அம்னோ ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்ட எளிய தண்டனைக்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.
அக்குற்றத்துக்காக 15 அம்னோ ஆதரவாளர்களுக்கு ஆளுக்கு ரிம1,500 அபராதமும் மேலும் ஒருவருக்கு ரிம1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
“குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது”, என ஏஜி அலுவலகத்தின் வழக்கு தொடுக்கும் பிரிவின் துணைத் தலைவர் முகம்மட் ஹனாபியா ஜக்கரியா பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு அனுப்பிய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
16பேர்மீதும் எளிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக லிம் புகார் செய்ததை அடுத்து ஏஜி அலுவலகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
உண்மையைச் சொல்வோன் அண்ணா வணக்கம். என்ன அழகாக நாடகம் நடத்துகின்றனர்?.
தண்டை என்றால் மற்றவர் அதே தவறை செய்வதற்கு நடுங்க வேண்டும்.காரணம் தண்டனை அப்படி இருக்கனும்…
எல்லாம் வெளிவேசம். நீதி துறை நீதிக்காக அல்ல-அக்காலம் மலை ஏறி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. காகாதிமிர் ஆரம்பித்து வைத்த அரை வேக்காடு மலாய் /முஸ்லிம் நீதி இது. அப்பட்ட இன மத வேறு பாடு. இந் நாட்டில் எத்தனை மலாய் அல்லாதார் நீதிபதிகளாக இருக்கின்றனர்? 80க்கு முன் நிலைமை எப்படி? இதே நிலை தானே எல்லா துறைகளிலும்? அரை வேக்காடுகளும் இன வழியில் வந்தவன்களும் தானே இப்போது எங்கும் உட்கார்ந்து இருக்கின்றனர்
30 வருடங்களுக்கு முன் மலேசியா நீதி பரிபாலன துறையில் முஸ்லீம் மற்றும் மலாய்காரர்கள் அல்லாதவர்கள் பெருபான்மையோர் இருந்தனர்.அதனால் அத்துறையில் நீதி நிலைத்திருந்தது.ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.மத தீவிரவாதம் அதில் புகுத்தப்பட்டதால் நீதி பரிபாலனமே கேள்வி குறியாக்கப் பட்டுள்ளது.
எதற்கு மேல்முறையீடு…! நீங்கள்தான் குற்றமெ செய்யவில்லையே பிறகு என்ன…?