பிரதமர் நஜிப் அவரை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் பிரதமர் மகாதிருடன் திறந்த விவாதம் நடத்த வேண்டும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் பிரதமரை வலியுறுத்தினார்.
திறந்த விவாதம் நஜிப் அவருக்கு எதிராக மகாதிர் தொடுத்து வரும் கடும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க நல்ல வாய்ப்பாக அமையும் என்றாரவர்.
“திறந்த விவாதம்தான் மகாதிரின் கேள்விகளுக்கு சிறந்த தீர்வாகும். நஜிப் முன்வந்து மகாதிர் அவரது அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க வேன்டும் என்று சவால் விட வேண்டும்.
“உண்மையைக் கூறுவதில் நஜிப் தைரியமாக இருக்க வேண்டும் என்பதோடு அவர் வெளிவந்து மகாதிரை எதிர்கொள்ள வேண்டும், அப்போதுதான் மக்கள் முட்டாள்களாக்கப்பட மாட்டார்கள்” என்றரவர் கூறியதாக ஹராக்கா நாளிதழ் தெரிவிக்கிறது.
கடந்த வாரம் நஜிப் டிவி3 க்கு அளித்திருந்த நேர்காணல் போதுமானதல்ல என்பதோடு மகாதிர் எழுப்பியுள்ள முக்கியமான கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை என்று பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினரான மாபுஸ் மேலும் கூறினார்.
மக்களுக்கு இதற்கு முன்னர் எழுப்பப்பட்டவற்றுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மேலும் நஜிப் அளித்த விளக்கம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக இல்லை என்றாரவர்.
“மக்கள் கூறுவதெல்லாம் இதுதான்: அல்தான்துயா கொலை மற்றும் சர்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் ஆகியவை குறித்து விசாலமான விளக்கம் அளிக்க அரசாங்கம் தவறிவிட்டது”. என்று மாபுஸ் விளக்கினார்.


























இரண்டு பெரும் சேர்ந்து மக்களை குழப்புறமாதிரி இருக்கு ! ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவில் !
மக்கள் வரிக்கு பணம் முதல் பதில் செல்லடும்
நல்ல யோசனை வரவேற்கிறேன் அனால் இது சாத்தியமாகுமா?
மலையோடு மோத.பூனை G.s.t.யால்
முடியாதுங்கோ !