மே 7 பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் ஓர் அதிர்ச்சியை உண்டுபண்ணும் என்று அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
அன்வார் இப்ராகிம் அம்னோ உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து வென்று வந்துள்ள அத்தொகுதியில் “அதிர்ச்சிதரும்” அரசியல் மாற்றம் நிகழப் போகிறது என்றாரவர்.
அதை விளக்கும்படி கேட்டதற்கு ஏப்ரல் 23வரை காத்திருக்குமாறு அவர் செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டார். அன்று அம்னோ அதன் வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் ஆணா, பெண்ணா என வினவியதற்கு அம்னோ பால் வேறுபாடு பார்ப்பதில்லை என்றார்.
“ஆணோ பெண்ணோ எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான்”, என ஜாஹிட் கூறினார்.
ஆம் உண்மைதான்…. அந்த அதிர்ச்சி யாருக்கு என்று தெரிந்த விசயம்தானே……
உண்மையை சொல்லி ஓட்டு வாங்கும் பழக்கம் இல்லாத BN இப்போது என்ன பொய் சொல்ல போகிறார்களோ …. அதையும் கேட்டு ஓட்டு போடும் ……… களை நினைத்தால் ??
திருட்டுத் தளபதி வாயை திறந்தால் இப்படிதான் கோமாளித் தனமாக இருக்கும்…. ஆகவே சகோதரர்களே யாரும் பதற வேண்டாம்…
மாண்புமிகு அமைச்சாரே, நீங்கள் இப்படி பேசுவதுதான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
அம்னோ பேராளர் மகாநாட்டில் பெர்மத்தங் பவு தொகுதி தலைவர்.இந்தியர்களை தரம் தாழ்த்தி பேசி பிரச்சனையை ஏற்ப்படுத்தினார் அதனால் G.s.t.நசிப்பு வெட்ப்பு மனு தாக்கல் செயிது அதிர்ச்சி யை உண்டுவாரோ?
ஆமாண்டா கள்ள ஒட்டு காத்திருக்கு
இப்போதைக்கு அதிர்ச்சிதரும் செய்தி இது ஒன்றுதான்.ஏன், ரோசம்மாவை நிறுத்தப் போகிறீர்களா?