பத்து தீகா, சுங்கை ராசாவ் சாலைக்கட்டண வசூலிப்பு 2038வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பிளஸ் மலேசியா நிறுவனம், சாலை பயனர்கள் இப்போது சாலைக் கட்டணத்தில் பாதியைதான் செலுத்தி வருகிறார்கள் என்பதையும் வலியுறுத்தியது.
2018-இல் முடிவடைவதாக இருந்த கூட்டரசு நெடுஞ்சாலை 2வது வழித்தடத்துக்கான சாலைக்கட்டண வசூலிப்பு, 2011-இல் கட்டணக் குறைப்புடன் மேலும் இருபதாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதாக அந்நிறுவனம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
“2018-இல் முடிவடையும் ஒப்பந்தத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் இப்போது பத்து தீகாவில் சாலைக்கட்டணம் ரிம2.40 ஆக இருக்கும். ஆனால், அங்கு இப்போது சாலைக்கட்டணம் ரிம1.10 தான். 2005-திலிருந்து இதில் மாற்றமில்லை”, என்று அது கூறிற்று.
முழுமையான ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரியப்படுத்தாமல், ஒப்பந்தத்தை நீட்டிப்பது மக்களுக்கு செய்யும் துரோகமே!!!! கொள்ளை மேல் கொள்ளை. வெள்ளைக் காலர் கொள்ளை என்பது இதுதானோ????
ஒப்பந்தத்தை கேட்காதீர்கள். உங்களையும் உள்ளே போட்டாலும் போட்டு விடுவார்கள். இது ராணுவ ரகசியம், கொள்ளையர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
நம்பிக்கை நாயகனுக்கு வாக்கு போட்டதால் மக்களுக்கு கிடைத்த வெகுமதி என்று ஏற்றுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால்!
யாரை ஏமாற்றுகிறீர்கள்? ஒப்பந்தம் செய்யும்போது 2.40. அப்போது பத்து வண்டிகள் சென்றன. 24.00 வருமானம். இப்போது 1.10 என்கிறீர்கள். ஆனால், 100 வண்டிகள் செல்கின்றன. 110.00 வருமானம்.
இதுதான் பகல் கொள்ளை ……
அப்படி போடு திரு .சிங்கம்.
மக்களை நசுக்கிறார்கள்.எத்தனையோ தோல் சாவடி ஒப்பந்தங்கள் காலாவதியாகியும் அப்படியே வைத்து ஒட்டி தன் வசதியை பெருக்கி இன்பமாக வாழ்கிறார்கள்.இனி வரும் பணமெல்லாம் லாபம்.மக்கள் கடனாளி.