ரொம்பினில் பாஸின் தேர்தல் இயந்திரம் அமைந்தது

nasபாஸ்  கட்சி  ரொம்பின்  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலைச்  சந்திக்க  தயாராகி  விட்டது. நேற்று  முவாட்ஸாம் ஷா, பெல்டா கெரோத்தோங் 4-இல்  அக்கட்சியின்  தேர்தல்  இயந்திரம்  தொடக்கி  வைக்கப்பட்டது.

அதைத்  தொடக்கி  வைத்த  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  நஸ்ருடின்  ஹசான் தந்தாவி, கடந்த  பொதுத்  தேர்தலில் 15,114 வாக்குகள்  பெரும்பான்மையில் அத்தொகுதியை வென்ற  பிஎன்னை  எதிர்ப்பது  பாஸுக்குப்  பெரும்  சவாலாக  இருக்கும்  என்றார்.

“தேர்தல்  இயந்திரத்தை  என்ன  சொல்லி  ஊக்குவிப்பது  என்றே  தெரியவில்லை. அது  (பெரும்பான்மை) ஒன்றும் சிறியதல்ல. ஆனால், கடுமையாக  உழைத்தால் வெல்லலாம்  என்ற  நம்பிக்கை  நமக்கு  வேண்டும்”, என்றாரவர்.

தெமர்லோ  எம்பியுமான  நஸ்ருடின்,  கட்சி யாரை  வேட்பாளராக  தேர்ந்தெடுத்தாலும்  அவரின்  வெற்றிக்காக கட்சி  இயந்திரம்  பாடுபட  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

பாஸ்  ஏப்ரல் 20-இல்  அதன்  வேட்பாளரை  அறிவிக்கும்.