செபராங் ஜெயா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் பண்டார் பெர்டா, செபராங் பிறை போலீஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்பு கொண்ட போது, “நான் இங்கிருக்கிறேன்,ஆனால் இப்போது பேச முடியாது” என்று தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு தியன் கூறினார்.
இருப்பினும், நள்ளிரவு 12. 15 க்கு செய்திருந்த டிவிட்டரில், “தமது காரை போலீசார் செபராங் ஜெயா நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தினர் என்று தெரிவித்தார்.
“நான் கைது செய்யப்படுகிறேனா, அவர்கள் என்னை எங்கு கொண்டு செல்வார்கள் என்று கேட்ட போது போலீசார் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். பலர் என்னை தலையில் தாக்கினர், எனது தலைமுடியைப் பிடித்து இழுத்தனர்.”
போலீசார் தம்மை கோலாலம்பூரில் அடைத்து வைக்க திருப்பி அனுப்புவார்கள் என்று தாம் நம்புவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினரான தியன் சுவா கூறினார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மாச்சாங் புபோக் மற்றும் குபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர்களான லீ காய் லூன் மற்றும் சியா கா பெங் ஆகியோர் போலீஸ் தலைமையகத்திற்கு விரைந்தனர்.
“அவர் (தியன்) முரட்டுத்தனமாக நடத்தப்பட்டிருக்கிறார்”, என்று லீ கூறிக்கொன்டார்.
மே 1 இல், கோலாலம்பூரில் நடந்த ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக தியன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.
ஆமாம் இவர் முரட்டுத்தனமாகத்தான் நடத்தப்பட வேண்டும். இவர் நாட்டின் மிக பயங்கர மான தீவிரவாதி, நாயன்தான். நம்ம போலிஸ் ஒரு சில தலைவன்களுக்கு வாலை ஆட்டிக் கொண்டு ஓடுகிறது.
டேய் james நீ என்ன தான் சொல்ல வர……….
அடேய் செல்வா, இதை புரிய கொஞ்சம் யோசிக்கணும். பல முள்ளமாரிகளும் தீவிரவாதிகளும் சுதந்திரமா திரியுராணுங்க அல்லது ராஜ மரியாதை கொடுக்கப் படுகிறது ஆனால் நல்லதை தட்டி கேட்பவர்கள் படாத பாடு படுகிறார்கள். இதனை எதிர் மறையாக சொன்னேன்டா.
கூல் செல்வா கூல் ஜேம்ஸ் சொல்ல வந்தது நியாயம்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் ஜி எஸ் டியால் மிகவும் பாதிப்படைந்துள்ளதால் மிகவும் டென்ஷனாக இருக்கிறிர்களா?
செல்வா உமக்கு தமிழ் மொழி அறிவு பத்தாது ! நல்ல தமிழாசிரியரை தேடிபுடிச்சி கற்றுகொள் ..
ஏன் நாம் எல்லோரும் செல்வாவை குறை கூர வேண்டும் அவரை புரிந்து கொள்ள முயலுவோமே, அவர் தமிழ் ஏழுத ஆசை பட்டு
தட்டச்சு செய்திருப்பார். அதனால் வந்த தவறுதான். அவருடையது . நானும் கூட பல தடவை இப்படி தவறு செய்திருக்கிறேன் .மனிக்கவும்
அவரை நாம் எல்லோரும் நண்பராக ஏற்றுக்கொள்வோம நண்பர்களே.
காலப்போக்கில் எப்படி தட்டச்சு என்று தெரிந்துகொள்வார் செல்வா
ஏன் குறை சொல்லக் கூடாது? ஒரு விசயத்தைப் பற்றி தெரியாதவர் மரியாதையாகத்தான் கேட்க வேண்டும். மரியாதைக் குறைவாக ” டேய்” என்பதெல்லாம் கற்றவர் பண்பாகாது.இதிலே james அருமையாக பதில் கொடுத்திருந்தார். இனி மேலாவது கருது சொல்லும்போது மரியாதைக் குறைவான சொற்களை உபயோகிப்பதை தவிர்ப்போம்;
கேள்வி கேட்க அல்லது மாற்று கருத்துகள் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அதற்க்கான தளம் இதுவே. ஆனால் அது நாவடக்கமாக இருக்க வேண்டும். அப்படி தவறு என தெரிந்தால் மறுபடியும் மாற்றி எழுதி இருக்கலாம்.