இறுதிக் கட்ட பரப்புரையில் ஹுடுட்டை வைத்து ஆடுகிறது பாஸ்

rompinஹுடுட்  செயலாக்கத்துக்கு  ஆதரவளிக்கும்  எம்பிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்க  வேண்டும். அதற்காகவாவது  பாஸ்  வேட்பாளருக்கு  வாக்களிக்க  வேண்டும்  என  ரொம்பின்  வாக்காளர்களிடம்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று  முவாட்ஸாம்  ஷாவில்  ஒரு  செராமாவில்  உரை  நிகழ்த்திய  பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான், பாஸ் எம்பி   ஒருவர்  இருப்பது  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கொண்டுவரும்  தனி  உறுப்பினர்  சட்டவரைவை  மக்களவை  ஏற்றுக்கொள்வதற்கு  உதவியாக  இருக்கும்.

“நாடாளுமன்றத்தில் நம்  தலைவர்  கொண்டுவரும்  ஷியாரியா  சட்ட  திருத்தத்துக்கு வாக்குகள்  தேவை”, என்றாரவர்.

ரொம்பினில்  நாளை  இடைத்  தேர்தல். அங்கு  பிஎன்  வேட்பாளர்,  முன்னாள்  பகாங்  துணை மந்திரி  புசார்  ஹசான்  அரிபினும் பாஸ்  வேட்பாளராக ஒரு  உஸ்தாஸான நஸ்ரி அஹமட்டும் மோதுகின்றனர்.

கடந்த  மூன்று  பொதுத்  தேர்தல்களிலும் பிஎன்  வெற்றிபெற்று  வந்துள்ள  ஒரு  தொகுதி  ரொம்பின்.